Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ... பல லட்ச ரூபாய் சம்பளமுள்ள வேலையை உதறிய பெண் !

Advertiesment
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ... பல லட்ச ரூபாய் சம்பளமுள்ள வேலையை உதறிய  பெண் !
, சனி, 14 டிசம்பர் 2019 (17:42 IST)
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக பெண் சாப்ட்வேர் இன்ஜூனியர் ஒருவர்  பல லட்சம்  ரூபாய் சம்பளத்தில் கிடைத்த வேலையை மறுத்துள்ளது அங்கு பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பரங்குன்றம் அருகேயுள்ள வடபழஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் ஜாஸ்மின். இவர், அண்ணா பல்கலைக் கழகத்தில் முதுகலை பொறியியல் பட்டத்தில்  சாப்ட்வேர் இன்ஜினியர் படிப்பு முடித்துள்ள நிலையில் இவருக்கு ஒரு பிரபல தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது.
 
இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால், வடபழஞ்சி கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு ஜாஸ்மின் போட்டியிடுவதாக திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகத்தில் நேற்று விண்ணப்பம் தாக்கல் செய்துள்ளார். பல லட்ச ரூபாய் வேலை கிடைத்தும் அதை ஒதுக்கிவிட்டு கிராமத்தின் முன்னேற்றத்துக்கான போட்டியிட உள்ள ஜாஸ்மினுக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது என்னங்கடா பகல் கொள்ளையா இருக்கு...