Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிணற்றை கணோம் ! அமைச்சரிடம் புகார் அளித்த பொதுமக்கள்

Webdunia
செவ்வாய், 1 ஜனவரி 2019 (12:06 IST)
அண்டாவைக் காணோம் குண்டாவைக் காணோம் என மக்கள் புகார் அளிப்பதைக் கேள்வி பட்டிருப்போம். ஆனால் கிணற்றைக் காணோம் என்று அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கல அருகே பாலக்கோடு சாலையில் உள்ள சேசப்ப நாயுடு கொட்டாய் பகுதியில் நீண்ட காலமாக  ஒரு கிணறு இருந்தாக கூறப்படுகிறது.அண்மைக் காலமாக இக்கிணற்றில்  தண்ணீர் இல்லாததால் பொதுமக்கள் பயன்படுத்தாமல் இருந்தது.
 
அதனால் ஊரில் உள்ள  குப்பைகளை எல்லாம் மக்கள் இக்கிணற்றில் கொட்டினர். இதனால் கிணறு குப்பைகளால் நிறைந்து அடையாளம் தெரியாதபடி போனது.
 
இதனையடுத்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகனிடம் இந்த பகுதி மக்கள் புகார் அளித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சிலரிடம் இதுகுறித்து கேட்டபோது, சிலர் கிணற்றை மூடி இருக்கக் கூடும் என தெரிவித்தனர். ஆனால் மூடியுள்ள கிணறு இப்போது எங்கே உள்ளது என தெரியவில்லை என்பதுதான் பிரச்சனையாக உள்ளது.
 
இந்நிலையில் காரிமங்கலம் பொதுமக்கள் இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் வாங்க பிறக்கப்போகும் குழந்தையை விற்க விளம்பரம் கொடுத்த தாய்.. அதிரடி கைது..!

முடிவெட்ட ஆன்லைனில் ஆர்டர் செய்த நபர்.. ரூ.5 லட்சத்தை இழந்ததால் அதிர்ச்சி..!

தெலுங்கு மக்கள் குறித்து தவறாக எதுவும் பேசவில்லை: நடிகை கஸ்தூரி விளக்கம்

நளினியை சந்தித்த பிரியங்கா, ராஜீவ் உடன் கொல்லப்பட்டோரின் குடும்பத்தினரை சந்திக்காதது ஏன்? வானதி சீனிவாசன்

'அமரன்’ படத்திற்கு வரிவிலக்கு.. மாணவர்களுக்கு இலவசம்.. வானதி சீனிவாசன் கோரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments