Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாய நிலங்களை அழித்து குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (23:27 IST)
நாகை அருகே நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகளுக்கு விவசாய நிலங்களை அழித்து குவாரி அமைக்க கிராம மக்கள் கடும் எதிர்ப்பு ; தமிழக அரசு குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்த வேண்டும் என கோரிக்கை 
 
படக்காட்சிகள் ; அழிக்கப்பட்ட விவசாய நிலங்கள், குவாரி அமைக்க உள்ள இடம், ஜேசிபி வாகனம், விவசாயிகள் 
 
பேட்டி ; 
 
1. கார்த்தி
2. சிலம்பரசன். கிராம வாசிகள். 
 
நாகை முதல் விழுப்புரம் வரை நான்கு வழிச்சாலை விரிவாக்க பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாகூர் முதல் நாகை வரை நடைபெறும் விரிவாக்க பணிகளுக்கு அருகேயுள்ள இளங்கடம்பனூர் கிராமத்தில் குவாரி அமைக்க தனியார் நிறுவனம் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.  அதனை தொடர்ந்து இளங்கடம்பனூர் கிராமத்தில் உள்ள 27 ஏக்கரில் குவாரி அமைப்பதற்கு உண்டான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. இதனையறிந்து அங்கு திரண்ட அப்பகுதி மக்கள், குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் சங்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுத்து குவாரி அமைக்க  அனுமதி வழங்க கூடாது என்றும் வலியுறுத்தினார்கள். விவசாய நிலங்களை அழித்து குவாரி அமைப்பதற்கு எதிராக போராடும் பொதுமக்களை கீழ்வேளூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமசுந்தரம் மிரட்டுவதாக கூறியுள்ள அப்பகுதியினர், நாகை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் விவசாய நிலங்களை பாழ்படுத்தி அமைய உள்ள குவாரி அமைக்கும் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் விவகாரத்தல் விக்கிரவாண்டியில் திமுக தோல்வி அடையும்..! ஹெச்.ராஜா

நீதிபதி சந்துருவின் அறிக்கையை கிழித்தெறிந்த பாஜக உறுப்பினர்... சென்னை மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு

முதல்வர் ஸ்டாலினை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்..! ஜெயக்குமார் வலியுறுத்தல்..!!

கள்ளச்சாராய விவகாரம்.! வி.சி.க. போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு.!!

சாதிவாரி கணக்கெடுப்பு.! சட்டப்பேரவையில் காரசார விவாதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments