Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவன் தலையில் சிக்கிய பாத்திரம்...தீயணைப்புத்துறையினர் செய்த தரமான செயல்...

Advertiesment
child
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (14:09 IST)
சிறுவர்கள் மழலைப் பருவத்தில் என்ன செய்வதென்றே அறியாமல் சில செயல்களை செய்கின்றனர். அதனால் தான் முன்னோர்கள் இளம் கன்று பயமறியாது என்று கூறினர்.  இப்படி செய்யும் செயல்கள் வினையாகி விடுவதும் உண்டு.

இந்த நிலையில்,  திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் 4 வயது சிறுவன் விளையாடிக் கொண்டிருக்கும்போது, தெரியாமல் பாத்திரத்திற்குள் தலையை சிக்க வைத்துக் கொண்டான்.

தன் தலையை பாத்திரத்தில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் அழுத சிறுவன் குடும்பத்தினரும் முயற்சி செய்தனர். ஆனால் பாத்திரத்தை எடிக்க முயற்சி செய்தும் முடியவில்லை. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள், சிறுவனை செல்போனில் RHYMES பார்க்க வைத்து அவன் தலையில் சிக்கிய எவர் சில்வர் பாத்திரத்தை அகற்றினர்.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகங்கை அரண்மனையில் இராணி மதுராந்தகி நாச்சியாரை சந்தித்த அண்ணாமலை: வைரல் புகைப்படம்..!