கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்ணிற்கு நடந்த சோகம்

Webdunia
ஞாயிறு, 31 டிசம்பர் 2017 (12:50 IST)
கணவனைப் பிரிந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த பெண்மணியை கொலை செய்த மூன்று ஆட்டோ ஓட்டுனர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கரூரைச் சேர்ந்தவர் இளையராஜா. இவரது மனைவி பர்வீன் பானு. இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், பர்வீன் பானு கடந்த 2015 ஆம் ஆண்டு மாயமாகி உள்ளார். இதனையடுத்து இளையராஜா தனது மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். போலீஸார் பர்வீனின் தொலைபேசி அழைப்புகளைக் கொண்டு விசாரணையை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது.
 
கணவனை விட்டு ஓடிவந்த பர்வீனுக்கு சென்னை பெருங்களத்தூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களான ராஜா மற்றும் மாணிக்கம் என்பவர்களுடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின், மறைமலை நகரில் வேறோருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில் ராஜா மற்றும் மாணிக்கத்துடன் பர்வீன் தகராறு செய்த நிலையில் ஆத்திரத்தில் இருவரும் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து நண்பர் கிஷோர் உதவியுடன் சடலத்தை கள்ளில் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர்.
 
போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜா மற்றும் மாணிக்கம் செய்த தப்பை ஒப்புக்கொண்டனர். ஒரு வருடம் கழித்து பர்வீனின் உடலை மீட்ட போலீஸார் ராஜா, மாணிக்கம் மற்றும் அவர்களுக்கு உதவிய நண்பர் கிஷோர் ஆகிய மூவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்