Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கலைஞருடைய முதல் தொகுதியை உடைய மாவட்டத்திற்கு வந்த சோதனை!

கலைஞருடைய முதல் தொகுதியை உடைய மாவட்டத்திற்கு வந்த சோதனை!
, ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (00:38 IST)
கலைஞருடைய முதல் தொகுதியை உடைய மாவட்டத்திற்கு வந்த சோதனை பஸ் பாஸ் இன்னும் ரினிவல் செய்யவில்லை – கலைஞர் ஆட்சி அதாவது பத்திரிக்கையாளரின் ஆட்சியில் பத்திரிக்கையாளர்களுக்கே நல்லது செய்யாத செய்தி மக்கள் தொடர்புத்துறை மற்றும் போக்குவரத்து துறை – மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு செல்லுமா ?
 
 
முத்தமிழறிஞர், டாக்டர் என்பதனை விட, கலைஞர் கருணாநிதியை முதன்முதலில் சட்டசபைக்கு அனுப்பிய தொகுதி என்ற பெருமையை உடையது குளித்தலை சட்டமன்ற தொகுதி ஆகும், கரூர் மாவட்டத்தினை சார்ந்த இத்தொகுதிக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் உடனே, கலைஞரின் மகனும் தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு செல்வது உண்மையா ? என்ற ஒரு கேள்வி தற்போது இருக்க, கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபைகளில் ஒருவர் கூட மாற்றுகட்சியினர் கிடையாது, அனைவருமே திமுக வினை சார்ந்தவர்கள் என்பதினால் அதிமுக வினர் வரம்பு மீறக்கூடாது. கூட்டணி கட்சியினருக்கு கட்டுப்பாடுகள் என்று ஏராளமானவைகள் இருக்க, பத்திரிக்கையாளர்களுக்கு மார்ச் மாதம் இறுதி இலவச பஸ் பாஸ் அட்டைகளை ரீனிவல் செய்து அதனை பத்திரிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும், இந்த கடினமான வேலையினை செய்தி மக்கள் தொடர்புத்துறை, போக்குவரத்து துறையிடம் கொடுக்க, அந்த பஸ் பாஸ் ரீனிவல் ஆகிவந்து விடுவது ஒரு வாரம் ஆகுமாம்,. இது மட்டுமில்லாமல், ஏற்கனவே இருந்த அதிமுக ஆட்சியில் அவ்வப்போது மார்ச் மாதம் பிறப்பதற்கு முன்னரே ரினிவல் செய்து தந்து வரும் நிலையில் கடந்த இருமுறை இருந்தவர்கள் போக்குவரத்து துறை அமைச்சர்களாக கரூரை சார்ந்தவர்கள் இருந்தனர்.

தற்போது ஆட்சி மாறியும் காட்சி மாறாத நிலையில், அதுவும் கலைஞர் கருணாநிதியும் ஒரு பத்திரிக்கையாளரே, முரசொலி என்ற நாளிதழை நடத்தியவர் ஆவார். இப்படி இருக்க, ஒரு பத்திரிக்கையாளருடைய ஆட்சியிலேயே இப்படி, பத்திரிக்கையாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் இருப்பதற்கு காரணம், நகரமைப்பு தேர்தலில், காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கூட்டணி குறித்து பேசிய போது, தொகுதி பங்கீடு குறித்து பேசும் போது வெளியே போ, என்று கழுத்தை பிடித்து தள்ளும் காட்சிகளை பத்திரிக்கையாளர்கள் செய்தி எடுத்ததனாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வெளியில போயா என்று ஒருமையில் ஒரு பெரியவரை அதுவும் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகரை தகாத வார்த்தையில் திட்டி வெளியே அனுப்பிய காட்சிகளை பத்திரிக்கையாளர்கள் வெளியிட்டதனையடுத்து, தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சரும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜி மற்றும் கரூர் கலெக்டர் பிரபுசங்கர் கூட்டுநடவடிக்கையால் இன்னும் பத்திரிக்கையாளர்களுக்கு பஸ் பாஸ் ரினீவல் செய்து தருவது காலதாமதம் செய்து வருகின்றதாம் சம்பந்தப்பட்ட துறை நிர்வாகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மோகனூர் கதவணை தடுப்பணை திட்டத்தை கைவிட்ட அரசு!!