Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடையில் மலம் கழித்த சிறுவன் மீது சுடுதண்ணீர் ஊற்றிய ஆசிரியர்!

Advertiesment
teacher
, சனி, 10 செப்டம்பர் 2022 (19:18 IST)
ஆடையில் மலம் கழித்த 7 வயது சிறுவன் மீது ஆசிரியர் சுடுதண்ணீர் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக மாணவர்கள் தவறு செய்தால் அவர்கள் திருந்துவதற்கு ஆசிரியர்கள் அறிவுரை கூறுவார்கள். இந்த நிலையில், சமீக காலமாக  மாணவர்கள் மீது கடும்  நடவடிக்கைகள் எடுக்கப்படுவது பெரும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

இந்த நிலையில், கர்நாடக மா நிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தில், சந்தேக நல்லூரியில்  உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில், 2ஆம் வகுப்பு படித்து வரும் 7 வயது சிறுவன் ஆடையிலேயே மலம் கழித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஹூலிகெப்பா என்பவர் மாணவன் மீது கொதிக்கும் சுடுதண்ணீரை ஊற்றியுள்ளார்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த இந்த சம்பவம் பற்றி இப்போதுதான் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து ...பரவலாகும் சிசிடிவி வீடியோ