Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கட்டாய திருமணம் செய்து வைத்ததால் இளைஞர் தற்கொலை: துக்கம் தாங்காமல் காதலியும் தற்கொலை

Webdunia
சனி, 29 டிசம்பர் 2018 (19:31 IST)
திருச்சி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அவரை காதல் திருமணம் செய்து கொண்ட  பெண் தற்கொலை செய்ததால் காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள். 


 
புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே ரங்கமுத்து பட்டியைச் சேர்ந்தவர்  பார்த்திபன். இவர் துவாக்குடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அவர் அதே ஊரைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்தாராம். இந்த காதல் பெண்ணின் பெற்றோருக்கு தெரிந்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அனுப்பிரியாவை உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். காதலியை ரகசியமாக பார்க்க சென்ற பார்த்திபன், பெண்ணின் உறவினர்களிடம் சிக்கி கொண்டாராம். இதையடுத்து பார்த்திபனின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். பார்த்திபன் பெற்றோர் செல்வதுக்கு முன்பாக இருவருக்கும் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்துவிட்டனர்.  அங்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்த பார்த்திபனின் பெற்றோர் மகனை தங்களிடம் அனுப்புமாறு கேட்டும் அவர்கள் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. நிலவு 19ஆம் தேதி அங்குள்ள கோவிலில் விஷம் குடித்த நிலையில் பார்த்திபன் மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பார்த்திபன் சிகிச்சை பலனின்றி 22ம்தேதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து தங்கள் மகன் சாவுக்கு அனு பிரியாவின் பெற்றோரை காரணமென  பார்த்திபனின் பெற்றோர் அளித்த புகாரை ஏற்று அனுப்பிரியாவின் உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதேபோல பார்த்திபனின் இறுதி ஊர்வலத்தின்போது அனுப்பிரியாவின் வீட்டை அடித்து நொறுக்கியதாக பார்த்திபனின் உறவினர்கள் 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 
 
இந்த நிலையில் சொந்த ஊருக்குத் திரும்பிய அனுப்பிரியா, கணவன் இறந்த சோகத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

ராஜீவ் காந்தியின் 33 -வது ஜோதி வாகனப் பயணம் தொடங்கிய இடத்திலே நிறுத்தம்-மாநில தலைவரின் கடிதம் ஏற்படுத்திய தடை!

10 ரூபாய் காயின்களை வாங்கலைனா கடும் நடவடிக்கை! – கடைகளுக்கு எச்சரிக்கை!

நீதிமன்ற அனுமதியின்றி யாரையும் கைது செய்யக்கூடாது..! ED-க்கு உச்சநீதிமன்றம் செக்..!!

இலங்கை மீனவர்கள் 14 பேர் கைது. இந்திய கடற்படையினர் அதிரடி..!

ரூ.22 கோடி கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல்.. சென்னையில் 5 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments