Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Exam போகணும்.. ப்ளீஸ் நிறுத்துங்க! பேருந்துக்கு பின்னாலேயே ஓடிய மாணவி! - நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் சஸ்பெண்ட்!

Prasanth Karthick
செவ்வாய், 25 மார்ச் 2025 (11:23 IST)

திருப்பத்தூரில் காலையில் தேர்வுக்கு செல்ல காத்திருந்த மாணவி பேருந்து நிறுத்தப்படாததால் பின்னாலேயே ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தற்போது தமிழக பாட திட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கோத்தக்கோட்டை என்ற பகுதியில் பள்ளி மாணவி ஒருவர் தேர்வுக்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்துள்ளார்.

 

ஆனால் அவ்வழியாக சென்ற பேருந்து, நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதால் அந்த மாணவி பேருந்தின் பின்பக்க கம்பியை பிடித்துக் கொண்டு, பேருந்தை நிறுத்துமாறு கத்திக் கொண்டே ஓடியுள்ளார். சில நூறு மீட்டர்கள் சென்ற அந்த பேருந்து பின்னர் நிறுத்தப்பட்டதும், மாணவி உள்ளே ஏறினார்.

 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மாணவிக்கு பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச்சென்ற ஓட்டுநர் முனிராஜை பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழர்களின் சித்த மருத்துவத்தை களவாட முயலும் மத்திய அரசு? - குட்டி ரேவதி கடும் கண்டனம்!

அடுத்த ஆண்டு தான் சனிப்பெயர்ச்சி.. திருநள்ளாறு கோவில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு..!

வெனிசுலாவில் எண்ணெய் வாங்கினால் 25 சதவீதம் வரிவிதிப்பு! - உலக நாடுகளை மிரட்டும் ட்ரம்ப்!

சிங்கப்பூர்ல கழிவுநீரை சுத்திகரித்து குடிக்கிறாங்க.. நம்மாளுங்க முகம் சுழிக்கிறாங்க! - அமைச்சர் கே.என்.நேரு!

தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments