Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரமடைகிறது போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம்.! தமிழக அரசுக்கு நெருக்கடி.!!

protest

Senthil Velan

, புதன், 10 ஜனவரி 2024 (12:29 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பணிமனைகளை முற்றுகையிட்டு  போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கப் பேரவை, டிடிஎஸ்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ALSO READ: ராமர் கோவில்.! 32 ஆண்டுகள் மௌன போராட்டம்..!! 85 வயது மூதாட்டியின் கனவு நினைவானது..!!
 
இந்நிலையில் தமிழக முழுவதும் உள்ள பணிமனைகளை முற்றுகையிட்டு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் குண்டுகட்டாக கைது செய்தனர். 
 
webdunia
கோவை-திருச்சி சாலை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியதுடன் தரையில் அமர்ந்து அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தமிழகம் முழுவதும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதால் தமிழக அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோயில் திறப்பு விழாவில் அத்வானி.. வரவேண்டாம் என கூறிய நிலையில் திடீர் முடிவு..