Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்! - வானதி சீனிவாசன்!

மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்! - வானதி சீனிவாசன்!
, செவ்வாய், 26 டிசம்பர் 2023 (11:14 IST)
கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனியில் மாநகராட்சிக்கு  சொந்தமான இடத்தில்  சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது.


 
இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின்னர் இறகு பந்து விளையாடினார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வானதி சீனிவாசன்

இறகு பந்தாட்டம் மைதானம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார்.

மேலும் கால நிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகிறது என தெரிவித்த அவர் அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாம் மேற்கொள்ளவில்லை என்றார்.

கார்பன் சம நிலை இலக்காக வைத்து உலக நாடுகள் செயல்பட்டு வருகிறது என குறிப்பிட்ட வானதி சீனிவாசன் அதில் இந்தியாவும் கொள்கையுடன் திட்டங்களை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். கார்பான் சம நிலை அலுவலகம் என முன்னெடுப்பாக தெற்கு சட்டமன்ற அலுவலகத்தை மாற்றியுள்ளோம் எனவும் அரசு பள்ளிகளில் குறுங்காடுகள் உருவாக்கி வருகிறோம் எனவும்
இந்தியாவிலே முதல் எம்.எல்.ஏ அலுவலகம் கார்பன் சமநிலை அலுவலகமாக மாற்றுவது எங்கள் இலக்கு என்றார். மேலும் இயற்கையை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி வெள்ளம் பாதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவாக நிதி அளிப்பு குறித்து சொல்லியுள்ளார். மத்திய அரசு மீது பழி போடுவதே மாநில அரசின் செயல்பாடு உள்ளது.

webdunia

 
தேசிய பேரிடர் குழு களத்தில் பணி செய்யும் போது, முதல்வர் டெல்லியில் கூட்டணி கூட்டத்தில் இருக்கிறார். பண அரசியல் பேசுவதை  விட்டுவிட்டு மக்களின் துயரத்தை துடைக்க வேண்டும் என்றார். அமைச்சர் உதய நிதி பேச்சை நான்கு நாட்களாக கவனித்து வருகிறோம் என கூறிய அவர் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றார். ஆனால் மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்றார்.

மேலும், பிரதமரை சந்திக்க முதல்வர் செல்லவில்லை. கூட்டணி கூட்டத்திற்கு சென்றவர் பிரதமரை சந்தித்து வருகிறார். அப்பறம் நள்ளிரவில் சந்தித்தார், பிரதமருக்கு நேரம் இருக்கும்போது முதல்வரை சந்தித்து பாதிப்புகளை கேட்டறிந்தார் என்றார்.திமுக தலைவர்கள் வட மாநில தொழிலாளர்களை தரக்குறைவாக பேசுவது முதல்முறை இல்லை. தொடர்ச்சியாக பேசுவதும் மன்னிப்பு கேட்பதுமாக உள்ளது.தமிழிசை செளந்தரராஜன் தூத்துகுடியில் ஆய்வு பன்னாங்களா?? மக்களை பார்த்தாங்களா?? என்று ஆச்சிரியத்துடன் கேட்டார்.

பின்னர் தேர்தலில் போட்டியிட்ட தொகுதி என்பதால் மக்களை சந்தித்து இருப்பார். மக்களை சந்தித்து ஆறுதல் யார் வேண்டுமாலும் கூறலாம் என்றார்.

உதயநிதி அழுத்தம் காரணமாக தான் ஹெலிக்காப்டர் மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ளார்களா??? தேசிய பேரிடர் குழு மீட்பு பணியில் இறங்கியதா?? என கேள்வி எழுப்பினார். வெள்ளம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையானதை செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பங்குச்சந்தை மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிஃப்டி நிலவரம்..!