Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தந்தை மீதுள்ள கோபத்தால் தாயை கொன்ற மகன் : திடுக்கிடும் சம்பவம்

Advertiesment
தந்தை  மீதுள்ள கோபத்தால் தாயை கொன்ற மகன் : திடுக்கிடும் சம்பவம்
, திங்கள், 31 டிசம்பர் 2018 (12:59 IST)
சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் நடேசன். இவர் அப்பகுதியில் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார். இவரது முதல் மனைவி மனநோயால் பாதிக்கப்பட்டதால் நடேசன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு விக்னேஷ்வரன் என்ற மகன் உள்ளார். 
விக்னேஷ்வரன் ஒரு  காபி உணவகத்தில்  வெயிட்டராக பணியாற்றி வந்தார். கொலை நடந்த அன்று வீட்டுக்கு வந்த விக்னேஷ்வரன் நீண்ட நேரம் கதவை தாழிட்டு திறக்காமல் இருந்துள்ளார்.
 
இதனையடுத்து சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் கதவை தட்டி உள்ளே சென்றனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை. உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போது விக்னேஷ்வரன் தூக்கில் தொங்கியபடியும் அவரது தாய் சுந்தரவல்லி படுக்கையில் இறந்தபடி இருந்துள்ளார். 
 
இது பற்றி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீஸார் இருவரது உடலையும் கைப்பற்றி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு உடற்கூறு செய்ய அனுப்பி வைத்தனர்.
 
தாய் மனநோயால் பாதிக்கப்பட்டதால் தான் தந்தை இரண்டாது திருமணம் செய்து கொண்டார். அதனால் நம்மை கவனிக்க மறுக்கிறார் என்ற விரக்தியிலும், தாயின் துன்பத்தைக் காணச் சகிக்காமல் தான் விக்னேஷ்வரன் தாயைக் கொன்று தானும் தற்கொலை செய்ததாக தகவல் வெளியாகின்றன.
 
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு? – போஸ்டரால் சர்ச்சை !