நம்ம ஊரில் சிறுகள் முதல் பெருசுகள் வரை அனைவருக்கும் பரீட்சயமானது மாருதி நிறுவனத்தின் ஆம்னி கார். சிறு மளிகைக் கடைக்காரர், தொலைதூரப் பயணம் போன்றவற்றுக்கு ஏற்றதாக மத்தியத்தர வர்க்கத்தினர் உபயோகத்தினரின் பட்ஜெட்டுக்கு ஏற்ற இந்த ஆம்னி வாகனத்தின் உற்பத்தி இனி இருக்கப்போவதில்லை என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஆம்னி வாகனம் இந்தியாவில் 1984 ஆம் ஆண்டு மாருதி நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. வெற்றிகரமாக 35 ஆண்டுகளைக் கடந்து மக்களால் இன்றும் பயன்படுத்தப்பட்டு சாலையில் வலம் வந்து கொண்டிருக்கிறது.
தற்போது மாருதி நிறுவனத்தால் ஒரு அறிவிப்பு விடப்பட்டுள்ளது. அதில் இனி ஆம்னி காரை உற்பத்தி செய்யப்போவதில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.
மேலும் எல்லோருக்கும் தெரிந்த மாருதி 800 காருக்குப் பிறகு ஆம்னி காரை மாருதி நிறுவனம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி ஏபிஎஸ், ஏர் பெக் ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், இத்ல் கூடுதலான சீட் பெல்ட், ரிவர்ஸ் அசிஸ்டஸ் ஆகியவையும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அண்மையில் மாருதி நிறுவனம் ஈகோ என்ற எம்.பி.வி ரக வாகனத்தை சந்தையில் அறிமுகம் செய்தது. எனவே பழைய வானங்களின் நிறுத்துகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.