Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆடுகளை திருட வந்தவனுக்கு என்ன நடந்தது தெரியுமா ?

Advertiesment
ஆடுகளை திருட வந்தவனுக்கு என்ன நடந்தது தெரியுமா ?
, புதன், 1 மே 2019 (18:59 IST)
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகேயுள்ள ஊரில் ஆடுகளை திருட வந்த திருடனை மக்கள் படித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறுப்பூர் அடுத்த கீழ்கண்டார் கோட்டைப் பகுதியில் ஆடுகள் தொடர்ந்து காணாமல் போனவண்ணம் இருந்தன. இதனால் ஆடு உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
 
எனவே திருடனை பிடிக்க மக்கள் நினைத்திருந்தனர். இந்நிலையில் இருசக்கரத்தில் ஊருக்குள் வந்த இருவர் ஆடுகளை திருட முயன்றனர். இதைக்கண்ட பொதுமக்கள் இருவரில் ஒருவனை மடக்கிப்பிடித்தனர். அப்போது மக்களில் சிலர் திருடனுக்குத் தர்ம அடி கொடுத்தனர்.
 
இந்த தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் திருடனை கைதுசெய்தனர். தப்பி ஓடிய திருடனை தற்போது போலீஸார் தேடி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆட்சியை காப்பாற்ற 5 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? அதிமுகவின் அடுத்த பிளான்