Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும்....பள்ளிக் கல்வித்துறை திட்டம்

Advertiesment
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும்....பள்ளிக் கல்வித்துறை திட்டம்
, வெள்ளி, 20 மே 2022 (15:46 IST)
தமிழகத்தில்  கோடை மாத விடுமுறைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பது தள்ளி போகும் என தகவல் வெளியாகிறது.

தமிழகத்தில் 10, 11 , 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

1 முதல் 9 ஆம் வகுப்பு உள்ள மாணவர்களுக்குப் பள்ளி இறுதி தேர்வு முடிந்து, 14 ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 13 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பிளஸ் 2, பிளஸ் 1  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக விடைத்தாள் திருத்தும் பணி, ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள், பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் காரணமாக ஜுன் மாதம் இறுதியில்தான் பள்ளிகள் திறக்கப் பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உலகின் மிக உயரமான இடத்தில் வானிலை மையம்! – தேசிய புவியியல் கழகம் சாதனை!