Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாசகம் பெற்ற பணத்தை நிவாரண நிதியாக வழங்கிய முதியவர் !

Advertiesment
old man
, திங்கள், 18 மே 2020 (14:58 IST)
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு என்ற பகுதியைச் சேர்ந்த முதியவர் பூல்பாண்டியன். இவர் தனது மனைவி இறந்த பிறகு பொதுச்சேவையில் அதிக நாட்டம் கொண்டார். எனவே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற்ய் யாசகம் பெற்று அந்தப் பணத்தை பள்ளிகளுக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில், பூல்பாண்டியன்  கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, அவர் மதுவரை மாவட்டத்து வந்திருந்தார்.

அங்கு பல பகுதிகளில் யாசகம் பெற்ற அவர் ரூ.10 ஆயிரம் பணத்தைச் சேர்த்து வைத்திருந்து, அதை கொரோனா நிவாரண நிதியாக  இன்று மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினயிடம் கொடுத்தார்.

அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாரிடமும் ரூ.10 ஆயிரம் நிவாரண நிதியாகக் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதியவர் பூல்பாண்டியனின் செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை: ஐந்து இணையதளங்களை முடக்கியது `தமிழீழ சைபர் படையணி`