Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு
, புதன், 21 ஜூன் 2023 (09:07 IST)
கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார். திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு அந்தப் பகுதியில் நடந்த ஒரு காதணி விழாவில் மேடை அலங்காரம் செய்ய சென்றார். அப்பொழுது அந்த விழாவை நடத்திய திருமணமான 30 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அது கள்ளக் காதலாக மாறியது. அந்த பெண்ணுக்கு 21 வயதில் மகள் உள்ளார். இந்த கள்ளக் காதல் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது. அவர் இதை கண்டித்தார். இதனால் அவர் வீரகுமார்யிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.
 
இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு வீரக்குமாருக்கு திருமணம் முடிந்தது. அதன் பிறகு வீரக்குமாருக்கு மீண்டும் அந்த 30 வயதான பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் கண்டித்து உள்ளார். ஆனாலும் அந்த பெண் வீரகுமார்யுடன் இருந்த கள்ளக் காதலை விடவில்லை. இதற்கு இடையே தனது கணவரின் கள்ளக் காதல் குறித்து வீரகுமாரின் மனைவிக்கு தெரியவந்தது.

இதனால் அவர் தனது கணவரை கண்டித்தார். ஆனால் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கணவருடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை அடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீரக்குமார் அவர்களிடம் கோபித்துக் கொண்டு அவருடைய மனைவி அவர் பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அதேபோல் வீரக்குமார்  கள்ளக் காதலனுக்கும், கணவருக்கும் இடையே  இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அந்த பெண் கணவரை பிரிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வடவள்ளி அருகே ஆண்டிபாளையத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் அந்த பெண் தனது பெற்றோரிடம் வீரக்குமாரை தான் திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரிடம் கூறினார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண்ணின் பெற்றோர் அதுபோல் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும் கணவருடன் சேர்ந்து வாழும்படி கூறினர். இந்நிலையில் அந்த பெண் வீரகுமாரை தொடர்பு கொண்டு தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்குமாறு கூறினார். உடனே தன்னுடன் வேலை பார்க்கும் இரண்டு நபர்களுடன் ஆண்டிபாளையத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு சென்று அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு அவரது பெற்றோரிடம் கேட்டு உள்ளார்.  இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தாய், தந்தை வீட்டில் இருந்து அரிவாளால் வீரகுமாரை வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அவருடன் இருந்த இரண்டு பேர் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து புகாரின் பேரில் வடவள்ளி காவல் துறை அந்த பெண்ணின் தாய், தந்தை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நானும் ‘மேக் இன் இந்தியா’வுக்கு மாற போறேன்..! – கூகிள் எடுத்த அதிரடி முடிவு!