Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நித்யானந்தா இறந்துவிட்டாரா? சீடரின் வீடியோவால் அதிர்ச்சி.. ரூ.4000 கோடி சொத்து யாருக்கு?

Siva
செவ்வாய், 1 ஏப்ரல் 2025 (11:36 IST)
நித்யானந்தா உயிரிழந்ததாக அவரது சகோதரி மகன் அறிவித்த நிலையில், அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
பாலியல் புகாரில் சிக்கிய நித்யானந்தா இந்திய காவல்துறையால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு விட்டு வெளியேறி, "கைலாசா" என்ற தனிப்பட்ட நாட்டை உருவாக்கினார். 
 
கைலாசா நாட்டிலிருந்து வீடியோக்கள் மூலம் அவர் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்டு வந்த நிலையில், சமீபகாலமாக அவரது உடல்நிலையில் சிக்கல்கள் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. தற்போது அவரது சகோதரி மகன், நித்யானந்தா உயிரிழந்ததாக அறிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
 
இந்த நிலையில் அவரது அறக்கட்டளைக்கு சொந்தமான ₹4000 கோடி மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிப்பது யார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில்  அவர் உண்மையில் உயிரிழந்தாரா? இல்லையா? என்ற கேள்விக்கு உறுதியான பதில் இன்னும் வெளிவராத நிலையில், இந்த விவகாரம் தொடர்ந்து சர்ச்சையாக முடங்கியிருக்கிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை வெயில் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

அவுரங்கசீப்பின் கல்லறை சர்ச்சை தேவையற்றது: ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கருத்து..!

ஈபிஎஸ் , செங்கோட்டையனை அடுத்து பிரதமர் மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்.. என்ன காரணம்?

வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிந்தது பங்குச்சந்தை.. இன்றைய நிஃப்டி நிலவரம்..!

6 ரூபாய் மதிப்புள்ள Vodafone பங்கை 10 ரூபாய்க்கு வாங்கிய அரசு! 11 ஆயிரம் கோடி நஷ்டம்!?

அடுத்த கட்டுரையில்