Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபம் எடுக்கும் சிறுமி கொலை வழக்கு..! தலைவர்கள் கண்டனம்..!!

Advertiesment
Anbumani

Senthil Velan

, புதன், 6 மார்ச் 2024 (13:52 IST)
புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
 
புதுச்சேரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியும், குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை வழங்க வலியுறுத்தியும் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றனர்.
 
இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
சிறுமி கொலை தொடர்பாக பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி கடத்தி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்றும் மகளிர் நாள், நாளை மறுநாள் கொண்டாடப்படவிருக்கும் நிலையில், வெளியுலகம் அறியாத பிஞ்சு உள்ளத்துக்கு இழைக்கப்பட்டிருக்கும் கொடுமையை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுமி காணாமல் போனது குறித்து  புகார் கிடைத்த உடனே காவல்துறை நடவடிக்கை எடுத்திருந்தால் சிறுமியை பத்திரமாக மீட்டிருக்க முடியும். ஆனால், சிறுமியை தேடிக் கண்டுபிடிக்க காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் அச்சிறுமி சிதைத்து படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்று அன்புமணி ராமதாஸ் குற்றம் சாடியுள்ளார்.  அந்த வகையில் இந்தக் கொடுமைக்கு காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

 
9 வயது சிறுமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கும், அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களுக்கும் சட்டப்படி தூக்குத் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனை பெற்றுத்தர புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தக் குற்றத்தைத் தடுக்கத் தவறிய முத்தியால்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகாசிவராத்திரி: வெள்ளியங்கிரி மலையேற குவியும் பக்தர்கள்.. 3 லட்சம் பேர் என தகவல்..!