Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பணத்தையும் நகையையும் திருடிய பணிப்பெண்!- மறைந்திருந்து கையும் களவுமாக பிடித்த வீட்டார்!

J.Durai
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (16:36 IST)
கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள்.  இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.


 
இந்நிலையில் அடிக்கடி வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடு போயுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது.

இதனால் பணிப்பெண் பாரதி மீது சந்தேகம் கொண்ட அவர்கள் தொடர்ந்து பாரதியை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் முத்துக்குமார் மற்றும் பாரதி வெளியில் செல்வது போல் புறப்பட்டு படுக்கை அறையில் பீரோவின் எதிரே உள்ள மேல் சிளாபில்(கபோர்டு) ஏறி மறைந்து இருந்துள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை, மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர்கள் பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் காவல் நிலையத்தை ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர்.

தற்போது பணிப்பெண் பாரதி திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

நீட் தேர்வு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள்! சென்னை மாணவி தற்கொலை குறித்து ஈபிஎஸ்..!

திடீரென டெல்லி சென்ற செங்கோட்டையன்.. பதில் கூற மறுத்த எடப்பாடி பழனிசாமி..!

அதிக வரி விதிக்கும் இந்தியா என்று சொன்ன டிரம்ப்.. இப்போது ஏன் திடீர் மாற்றம்?

நீதிமன்றத்தை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் எக்ஸ்.. மத்திய அரசு குற்றச்சாட்டு

அடுத்த கட்டுரையில்
Show comments