Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேளாண் பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது: பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்

Mahendran
செவ்வாய், 20 பிப்ரவரி 2024 (15:52 IST)
வேளாண்  ஏமாற்றம் அளிக்கிறது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். 
 
தமிழக சட்டமன்றத்தில் இன்று விவசாயத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகள் இந்த பட்ஜெட்டை வரவேற்று வருகின்றன. 
 
இந்த நிலையில் வேளாண் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வேளாண் பட்ஜெட்டில்புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை என்றும் வேளாண் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். 
 
மேலும் தமிழ்நாட்டில் வேளாண் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது என்றும் அறுவடை கரும்புக்கு நிதி பெற முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் வேளாண் பட்ஜெட்டில் தென்னை விவசாயிகளுக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை என்றும் மொத்தத்தில் வேளாண் பட்ஜெட் ஒட்டுமொத்த விவசாயிகளுக்கும் ஏமாற்றம் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

சென்னை மாநகராட்சி திமுக கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கம்: துரைமுருகன்

திருப்பதி தயிர்சாதம் பிரசாதத்தில் பூரான்? தேவஸ்தானம் அளித்த விளக்கம் என்ன?

கடும் எதிர்ப்பு எதிரொலி: இமாச்சல பிரதேசத்தில் கழிப்பறை வரி ரத்து..!

மனைவியுடன் பைக்கில் சென்று உணவு டெலிவரி செய்த சோமாட்டோ சிஇஓ: விளம்பர உத்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments