Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதல்ஜோடி இன்று வேலை இல்லாததினால் ராவாக அடித்து மட்டையான நிலை ?

காதல்ஜோடி இன்று வேலை இல்லாததினால் ராவாக அடித்து மட்டையான நிலை ?
, செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (21:29 IST)
காதல்ஜோடி இன்று வேலை இல்லாததினால் ராவாக அடித்து மட்டையான நிலை ? அருகிலிருப்பவர்கள் பாவப்பட்டு பெண் என்று நினைத்து 108 க்கு போன் செய்த நிலையில், அந்த பெண்ணின் கணவர் போலீஸ் முன்னிலையில், பெண்ணை தாக்கிய சம்பவம் .
 
கரூர் மாநகரில் இன்று மாலை சுமார் 3.30 மணியளவில் பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே திருச்சி செல்லும் பாதையில் 108 வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. இந்நிலையில், பொதுமக்கள் பலர் அந்த வாகனத்தினை சுற்றி வேடிக்கை பார்த்த நிலையில், என்ன என்று பார்த்த போது தான் சுமார் 30 வயது மதுக்கத்தக்க ஒரு பெண்மணி மயங்கி கிடந்துள்ளார்.

அந்த பெண்மணியினை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஏற்ற மறுக்கின்றனர். காரணம் அதிகளவில் குடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ஏறவும் மாட்டுகின்றார் என்று, உடனே குடிபோதையில் அதே பகுதியில் நின்று கொண்டிருந்த கணவரும், அந்த காதல் மனைவியினை தூக்க முயற்சித்த போது அவரது காலை பிடிக்கின்ற போது கணவர் ஜம்ப் செய்து குதிக்கின்றார். ஆனால், அதே பகுதியில் வேடிக்கை பார்க்க வந்த ஆண் மற்றும் பெண் காவலர்கள், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தனர். போதை அதிகமாக இருப்பினும், தன் மனைவியின் மானம் போகின்றதே என்று கருதி, அடித்து உதைத்தும், அப்படியே அள்ளேக்காக தூக்கியும் அப்படியே தொப்பு என்று போட்டுள்ளார்.

சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகளை கட்டாயமாக மூட வேண்டுமென்ற அரசு உத்திரவினை மீறியும், மது விற்பனை கோலாகலமாக சுதந்திர தினத்தினையொட்டி விற்பனையொட்டி கள்ளாக்கட்டும், மதுவிற்பனை ஒரு புறம் என்றில்லாமல், அதனை சமூகத்திற்கு வெளிச்சம் போட்டு காண்பித்த கணவர், மனைவி ஆகியோரின் அதிக போதை அட்டகாசம், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில், தன் மனைவியினை WWF சேனலில் அடிதடி வீர்ர்கள் எப்படி தூக்குவார்களோ, அப்படி அள்ளேக்காக மீண்டும் தூக்கி பந்தாடும் கணவர் என்று சுமார் 30 நிமிடம் அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக பேருந்துகள், கார், ஜீப்களில் பயணம் செய்த பயணிகள் கதையல்ல நிஜம் மற்றும் சொல்வதெல்லாம் உண்மை இந்த தொடர்களை மிஞ்சும் அளவிற்கு காட்சிகள் அமைந்தன.

ஆனால், ஒரு படி மேலே, சென்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வாசனை திரவங்களை அந்த மது போதையில் மயங்கிய பெண்ணின் மூச்சில் வைத்து ஒருவழியாக ஆம்புலன்ஸ்சில் ஏற்றி கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பொறுப்பேற்று தற்போது சிங்கமுகம் காட்டி, குட்கா, கஞ்சா ஆகியவிற்பனைகளை தடுத்தும், அந்த சம்பவத்தில் ஈடுபடுவர்களை கைது செய்தும் வரும் நிலையில், காவல்துறையில் 6 நபர்களை மாற்றியும், இன்றும் இரண்டு காவல் ஆய்வாளர்கள் (கரூர், பசுபதிபாளையம் ) மாறாமல் காவல்நிலையங்களிலேயே பணியாற்றுகின்றனர். இதுமட்டுமில்லாமல், திராவிட ரோல் மாடல் ஆட்சி மற்றும் சர்வாதிகாரியாக மாறுவேன் என்று சொல்லி வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை வைத்து தான் அப்படி சொல்கின்றாரோ என்ற கேள்வியும் எழுப்ப காரணமாக உள்ளது.

தமிழக மதுவிலக்கு துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜியின் சொந்த தொகுதியில் தான் இந்த அரங்கேற்றம் என்பது கூடுதல் தகவல் என்பதினால், கடந்த சில தினங்களுக்கு முன்னர், தான் பள்ளி மாணவிகளை குடிக்க வைத்த இளைஞர்கள் என்ற செய்தியே முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்தில் இருந்து நீங்காத நிலையில், அதே மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியிலேயே அதுவும், சரக்கு (டாஸ்மாக்) விற்பனை இன்று சுதந்திரம் தினம் அன்று விடுமுறை அளிக்கப்பட்டும் சட்டவிரோதமாக மதுவிற்பனை எவ்வாறு செய்யப்படுகின்றது என்று கரூர் மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் மீண்டும் ஒரு அவதாரம் எடுத்துள்ளார். எது எப்படியோ, பெண்கள் நாட்டின் கண்கள், நம் பாரதத்தின் தாயாக நாம் கருதும் வேலையில், இன்று 75 முடிந்து 76 வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் கொண்டாடும் வேலையில், மங்கையருக்கும் சரக்கு ஊற்றி கொடுத்து அதில் ஒரு போதை தேடும் பணிக்கு வந்து விட்டது.

இன்றைய சமுதாயம், ஆகவே, மதுவிலக்கு துறை அமைச்சர் தொகுதியிலேயே பெண்ணுக்கு சரக்கு ஊற்றி, அவரை அடித்து துன்புறுத்தும் கணவர் என்று காண்போரை கண்கலங்க வைக்கும் காட்சிகளை நிகழ்த்திய சம்பவம் மீண்டும் அரங்கேறமால் இருக்க, இத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தக்க நடவடிக்கை எடுப்பாரா ?.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக உடன் குறைந்தபட்ச சமரசம் கூட இல்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு