Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிலம்பம் சுற்றி அமைச்சரை வரவேற்றை சிறுமி

Advertiesment
The little girl who welcomed the minister around the mold
, திங்கள், 29 மார்ச் 2021 (23:25 IST)
கரூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் அடுத்த வெங்கமேடு பகுதியில் உள்ள செங்குந்தர் நகர், கருப்பண்ணசுவாமி ஆலய தெரு, எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வேனிலும், நடந்தே சென்றும், அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாக்குகள் சேகரித்தார்.

செல்லுமிடமெல்லாம், பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்த நிலையில், அமைச்சருக்கு அங்குள்ள சிறுமி ஒருவர் சிலம்பம் விளையாடி வரவேற்பு கொடுத்த நிகழ்ச்சி மிகவும் பொதுமக்களை கவர்ந்தது. மேலும், அந்த சிறுமி இரண்டு கைகளினால் சிலம்பம் சுற்றி தனது சிலம்பக்கலை மூலம் ஊருக்குள் வரவேற்றார். இந்த காட்சி அனைவரின் கவனத்தினையும் ஈர்த்தது. இந்நிலையில் இதனை தொடர்ந்து பேசிய அமைச்சரும், அதிமுக வேட்பாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், திமுக கட்சியினர் ஆங்காங்கே தற்போதே கரைவேஷ்டிகளை கட்டிக்கொண்டு வெளியே வருகின்றனர். காரணம் வரும் ஆட்சி திமுக ஆட்சி என்றும் ஏற்கனவே புரோட்டா கடை முதல் ப்யூட்டி பார்லர் வரை ஆங்காங்கே ரெளடியிசம் செய்து மக்களை மிரட்டி வந்த நிலையில், பிறர் சொத்துக்களையும் அபகரித்து விடுவார்கள் என்றார். ஆகவே மக்கள் நாம் சுதாரித்து கொள்ள, திமுக வினை விலக்கி விட்டு அதிமுக விற்கு வாக்களிக்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார். இந்நிகழ்ச்சியில் வடக்கு நகர செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலுக்குள் வைத்து பணப்பட்டுவாடாவா? தர்மபுரியில் பரபரப்பு