Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வாடகைத் தாய் சட்டம் சொல்வது என்ன? யார் யார் வாடகை தாயாக இருக்கலாம்?

pregnant
, திங்கள், 10 அக்டோபர் 2022 (17:28 IST)
நடிகை நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பெற்றுக் கொண்டதாக கூறப்படும் நிலையில் வாடகைத் தாய் என்றால் என்ன? யார் யார் வாடகை தாயாக இருக்கலாம்? வாடகை தாய் சட்டம் என்ன சொல்கிறது என்பது குறித்து தற்போது பார்ப்போம். 
 
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகள் நெருங்கிய உறவினரை மட்டுமே தேர்வு செய்யவேண்டும். 
 
25 முதல் 35 வயதுக்கு உட்பட்டவராக மருத்துவ ரீதியில் உடல் தகுதி பெற்றவராக வாடகைத்தாய் இருக்க வேண்டும் 
 
ஒரு பெண் வாழ்வில் ஒரே ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தனியாக வாழும் ஆண் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள தகுதி பெற்றவராவார்
 
ஒரு கைம்பெண் அல்லது விவாகரத்துப் பெற்ற பெண் வாடகை தாயாக இருக்க சட்டம் வழிவகை செய்கிறது. 
 
மருத்துவ காரணங்களுக்காகவும் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் தம்பதியர் மட்டுமே ஒரு பெண்ணின் மூலம் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் 
 
வாடகைத்தாய் மூலம் பிறக்கும் குழந்தை உயிரியல் குழந்தையாகவே சட்டபூர்வமாக கருதப்படும்
 
வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதி திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும். 
 
தம்பதியினர் 25 முதல் 55 இருக்க வேண்டும். மருத்துவம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்ள இயலாமை தொடர்பாக உரிய மருத்துவ சான்றிதழ்களை சமர்ப்பிக்கவேண்டும்.
 

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – காலையும் மாலையும் நேரம் நிர்ணயம்!