Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலைஞர் தான் என் அரசியல் குரு- நடிகை குஷ்பு நெகிழ்ச்சி

Advertiesment
kushbhoo -kalaignar karunanidhi
, திங்கள், 7 ஆகஸ்ட் 2023 (17:10 IST)
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 5 வது ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று மரியாதை செலுத்தினர்.

இந்த  நிலையில் தற்போது  பாஜக நிர்வாகியாகச் செயல்பட்டு வரும் நடிகை குஷ்புவிடம் கலைஞரின் நினைவுநாள் பற்றி செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த நடிகை குஷ்பு ‘’கலைஞர் என்னுடைய ஆசான் என்று சொல்லிக் கொள்வதற்கு ஆசைப்படுகிறேன். இன்று ஆகஸ்ட்  7 ஆம் தேதி என்று சொல்லும்போது அவரது  நினைவு நாள். காலையிலேயே  நான் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டேன்.  நான் டுவிட்டரை விட்டு இப்போது  வெளியே வந்துவிட்டேன். ஆனால், என் இன்ஸ்டாகிராமி ஸ்டோரியில் அவரைப் பற்றித்தான் உள்ளது.’’என்று கூறினார்.

கலைஞருடைய எந்தத் திறன் உங்களைக் கவர்ந்தது என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த குஷ்பு ‘’அவரைப் பற்றி பேச வேண்டுமானால்  நாள் முழுவதும் பேசுவேன். நான் அங்கிருந்து வந்தேன். அதனால் அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். இன்னொரு சந்தர்பத்தில் கலைஞரைப்  பற்றிப் பேசலாம்'' என்று கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை மனுத்தாக்கல்.. இன்னும் சில மணி நேரத்தில் உத்தரவு..!