Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆவீனுக்கு செல்லும் பால் கேன்களில் தண்ணீர் கலந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Advertiesment
mixing water

J.Durai

, திங்கள், 2 செப்டம்பர் 2024 (11:44 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொப்பம்பட்டி கிராமத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தி நிலையத்திலிருந்து தினசரி மதுரை ஆவினுக்கு 30க்கும் மேற்பட்ட கேன்களில் பால் கொண்டு செல்லப்படுகிறது.
 
கடந்த சில மாதங்களாக இந்த மையத்திலிருந்து ஆவினுக்கு கொண்டு வரப்படும் பால் தரமற்ற நிலையில் உள்ளதாக புகார் எழுந்த சூழலில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.
 
இந்த ஆய்வில் பொது மக்களிடமிருந்து பெறப்படும் பால்-யை மதுரை ஆவினுக்கு கொண்டு செல்லும் வழியில் நிறுத்தி தண்ணீர் கலப்பதை கண்டறிந்து அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் வாகன ஓட்டுநரிடமிருந்து தண்ணீர் மற்றும் தண்ணீர் கலந்த பாலையும் பறிமுதல் செய்தனர்.
 
இந்த பாலில் தண்ணீர் கலந்த வீடியோ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாக தற்போது வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலியல் புகார்களை பெற புகார் குழு.! உயர்கல்வித்துறைக்கு மாநில மகளிர் ஆணையம் அறிவுறுத்தல்.!!