அடுத்த 24 மணி நேரத்திற்கு தகிக்க போகும் வெயில்..! – வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

Prasanth Karthick
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (14:39 IST)
தமிழ்நாட்டில் வெயில் காலம் நடந்து வரும் நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வெப்பநிலை பல இடங்களில் உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் இன்னும் அக்கினி வெயிலே தொடங்காத நிலையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த மாதம் தொடக்கம் முதலே வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகிறது. இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட உயரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று தமிழகத்தின் ஓரிரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி பகுதியில் வறண்ட வானிலையே நிலவும். நாளை முதல் ஏப்ரல் 25 வரை மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான அளவில் மழை பெய்யக் கூடும்.

அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்சமாக தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் வெப்பநிலை 2-3 டிகிரி வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். சமவெளி பகுதிகளில் 39-42 டிகிரி செல்சியஸும், இதர பகுதிகளில் 34-39 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கக் கூடும் என கூறப்பட்டுள்ளது,

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள நடிகை பாலியல் வழக்கு: 6 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு.. எத்தனை ஆண்டு சிறை?

அமைதிக்கான நோபல் பரிசு வென்ற நர்கிஸ் முகமதி கைது: ஈரான் அரசு அதிரடி..!

16% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: ரிசர்வ் வங்கி தகவல்

மகளிர் உரிமை தொகை இன்னும் உயரும்.. முதல்வர் முக ஸ்டாலின் அறிவிப்பு..!

தலைக்கு மேல கத்தி!.. தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவாரா?!...

அடுத்த கட்டுரையில்
Show comments