Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லண்டனில் இருந்து ஓட்டு போட வந்தவர்.. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி..!

Siva
வெள்ளி, 19 ஏப்ரல் 2024 (14:05 IST)
லண்டனில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து ஓட்டு போட வந்தவருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்ற பதில் அளிக்கப்பட்டதால் அவர் பெரும் அதிர்ச்சி அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஓட்டு போடுவதற்காக ஆர்வத்துடன் பொதுமக்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் லண்டனில் வசித்து வந்த நிலையில் அவர் தனது வாக்கினை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒன்றரை லட்ச ரூபாய் செலவு செய்து சென்னை வந்தார். 
 
இன்று காலை அவர் வாக்குச்சாவடிக்கு சென்ற போது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் கூறியதால் அதிர்ச்சி அடைந்தார். 
 
இது குறித்து அதிகாரிகளிடம் அவர் வாக்குவாதம் செய்ததாகவும் ஆனால் அதிகாரிகள் முறையான பதில் தெரிவிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
 
என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது என்றும் கடந்த முறை கூட வாக்களித்ததாகவும் ஆனால் இந்த முறை தனது வாக்கு இல்லை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று கூறுவது துரதிஷ்டமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விமான நிலையத்திற்கு மாற்று இடம் எது என்பதை விஜய் தான் கூற வேண்டும்: அண்ணாமலை

பொங்கல் விடுமுறை எதிரொலி: மாதாந்திர பயண அட்டை பெற கால அவகாசம் நீட்டிப்பு..!

அதிமுக - பாஜக கள்ளக்கூட்டணி.. காப்பி பேஸ்ட் அறிக்கைகள் குறித்து அமைச்சர் சிவசங்கர்..!

சீமான் ஈழம் சென்றது உண்மைதான், ஆனால் அவர் எடுத்த புகைப்படம்.. கொளத்தூர் மணி

தமிழ் படிக்கும் வட மாநிலத்தவர்களின் குழந்தைகள்.. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments