Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Stalin

Sinoj

, புதன், 27 மார்ச் 2024 (20:28 IST)
எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனியும்  ஆளுநரை எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று பொருள் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
 
நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 
 
இந்த  நிலையில், இன்று, விருது நகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரியில்  திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
அப்போது அவர் கூறியதாவது: 
 
திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். அரசின் திட்டங்களால் ஒவ்வொரு குடும்பமும் பயனடைந்து வருகிறது. பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில்  மக்களின் எழுச்சியை  பார்க்கிறேன். தமிழகத்தில் காலை உணவுத் திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 16 லட்சம் பள்ளிக் குழந்தைகள் காலை உணவு திட்டத்தில் பசியாறுகிறார்கள். தாய்வீட்டுச் சீர்போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதம் ரூ. 1000 தருகிறார் என 1.06 கோடி பெண்கள் இன்று கூறுகின்றனர். புதுமைப் பெண்கள் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. அவர்கள் படித்து வேலைக்குச் சென்றால் அவர்கள் தங்க தோழி விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக வாக்கு கேட்க வந்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
.
மேலும், ஆளுநர் தனக்கு பிரச்சனை தராததால் அவரை எதிர்க்க வேண்டியதில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவுக்கொழுந்தாக பேசியுள்ளார். ஆளுநருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன தனிப்பட்ட பிரச்சனையா? தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் இருக்கிறார். அவரை எதிர்க்கிறோம். எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனியும் எதிர்க்கவில்லை என்றால் அவருக்கு சொரணை இல்லை என்று பொருள் என்று விமர்சித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மக்கள் யாரும் பிரதமர் மோடியை நம்பவில்லை -முதல்வர் ஸ்டாலின்