கொலை நடுங்கும் கொடூரம் - சமையல் பாத்திரத்தில் சிறுமி உடல்
கொலை நடுங்கும் கொடூரம் - சமையல் பாத்திரத்தில் சிறுமி உடல்
சேலம், அருகே சமையல் பாத்திரத்தில் சிறுமி ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.
சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தெளுங்கனூர் பகுதியைத் சேர்ந்தவர் ராஜா. இவரது 8 வயது மகள் மோகனவள்ளி.
வழக்கம் போல் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமி திடீர் என காணாமல் போனார். இது குறித்து, அவளது பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணையில் குதித்த போது, அருகில் உள்ள திருமூர்த்தி என்பவரது வீட்டின் அருகே சிறுமி நின்றதாகவும், பின்புதான் காணாமல் போனதும் தெரிய வந்தது.
இதனால், சந்தேகமடைந்த போலீசார் திருமூர்த்தியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதில், அங்குள்ள ஒரு பெரிய பாத்திரத்தில் அந்த சிறுமி பிணமாக கிடந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, திருமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், பாத்திரம் அருகே சிவப்பு நிறத்தில் குங்குமம் மற்றும் பூஜைப் பொருட்கள் சிதறி கிடந்ததால் நரபலிக்காக கொலை செய்யப்பட்டு இருக்காலம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.