விறுவிறுப்பாக நடந்த ஃபார்முலா ரேஸ் பந்தயம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

Prasanth Karthick
ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (08:35 IST)

உலக பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

 

 

சென்னையில் உலக பிரபலமான ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் இதற்காக சாலைகளை தயார் படுத்தும் பணி கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து நடந்து வந்தது. நேற்று இரவு ஃபார்முலா 4 கார் ரேஸ் பந்தயம் நடைபெற்ற நிலையில், அதை கண்டு களிக்க ஏராளமான மக்கள் அப்பகுதிகளில் குவிந்தனர்.

 

தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஃபார்முலா 4 ரேஸை தொடங்கி வைத்தார். முன்னதாக மக்களை மகிழ்விக்கும்படியாக கார்களின் சாகச பயிற்சி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. செஸ் ஒலிம்பியாட்டை தொடர்ந்து சென்னையில் சர்வதேச அளவில் நடக்கும் போட்டி என்பது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

 

பார்முலா 4 கார் பந்தயத்தின் தகுதி சுற்று ஆட்டங்கள் இன்று நடைபெற உள்ள நிலையில், இன்றும் மக்கள் அதிகமாக வருகை தர உள்ளதால் கார் ரேஸ் நடைபெறும் பகுதியில் போக்குவரத்து மாற்றம், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments