Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம்: சாப்ட்வேர் என்ஜினீயர் கைது

முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம்: சாப்ட்வேர் என்ஜினீயர் கைது
, சனி, 2 மார்ச் 2019 (17:26 IST)
முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த சாப்ட்வேர் என்ஜினீயரை போலீசார் கைது செய்தனர்.


 
சென்னை போரூரை அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் நரசிம்மராவ் (வயது 32). இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். 
 
நரசிம்மராவ், தன்னுடன் பணிபுரிந்து வரும் 25 வயது இளம்பெண்ணிடம் நட்பாக பழகியுள்ளார்.  இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மராவும், இளம்பெண்ணும் ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் பதிவு திருமணம் செய்துகொண்டு, அவரவர் வீடுகளில் வசித்து வந்தனர்.
 
சிறிது நாட்களுக்கு பிறகு அந்த இளம்பெண், தனது பதிவு திருமணம் குறித்து பெற்றோரிடம் கூறினார். அதைக்கேட்டு முதலில் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தாலும், பின்னர் தங்கள் மகளின் திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
 
மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் நரசிம்மராவ் தலைமறைவாகி விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் மற்றும் அவரது பெற்றோர் இதுபற்றி விசாரித்தனர்.
 
அதில், நரசிம்மராவுக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகள் இருப்பதும், ஆனால் அதை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்து இருப்பதும் தெரிந்தது. இதுபற்றி வட பழனி மகளிர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விமானி ’அபிநந்தனுக்கு ’ பிரதமர் மோடி புகழாரம்