முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலைக்கு இன்று வீர வணக்கம்..

சனி, 3 ஆகஸ்ட் 2019 (16:20 IST)
முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் தீரன் சின்னமலைக்கு அனைத்து வேளாளர் சமூகத்தினர் ஒன்று நான்குதிசை வேளாளர்களும் இணைந்து முதன்முதலில் வீர வணக்கம் செலுத்த உள்ளதாகவும், கரூரில் முதன் முதலில் துவங்கப்பட்டுள்ள மருத்துவக்கல்லூரிக்கு தீரன் சின்னமலை பெயரை சூட்ட வேண்டுமென்றும் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத்தலைவர் த.கார்வேந்தன் கரூரில் பேட்டி அளித்தார்.
கரூரில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் நிறுவனத் தலைவரும், அகில இந்திய வேளாளர் / வெள்ளாளர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளருமான த.கார்வேந்தன் செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது., முதல் சுதந்திர போராட்ட வீரர் 214 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அவர் தூக்கிலிடப்பட்ட, சங்ககிரி கோட்டையிலும், அவர் வாழ்ந்து மறைந்த ஓடாநிலை மணிமண்டபத்திலும், அவருக்கு தொடர்ந்து வீர வணக்கங்கள் செலுத்தும் நிகழ்ச்சியில் தமிழகமெங்கும் உள்ள நான்குதிசை வேளாளர் அமைப்புகள் சேர்ந்து ஒட்டு மொத்த வேளாளர்கள் இணைந்து முதன் முதலாக வீர வணக்கங்கள் செலுத்த உள்ள நிலையில், அனைத்து வேளாளர் / வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் வீர வணக்கம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்த, திரு.த.கார்வேந்தன், வேளாளர் என்கின்ற பெயரை மாற்று சமூகத்திற்கு வழங்க கூடாது என்றும், ஆனால் இன்று வேறு சமூகத்தினை சார்ந்தவர் தங்களுக்கு இந்த வேளாளர் பெயரை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்காக முதல்வர் ஒரு குழுவினையும் அமைத்துள்ளார்.
 
ஆகவே, இந்த பட்டியலில் இருந்து வெளியேறுவது நல்லது என்றும் மாற்று சமூகத்தினருக்கு வேளாளர் பட்டம் வழங்கினால் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் தக்க பதிலடியை அகில இந்திய வேளாளர் / வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் கொடுக்கும் என்றும் தெரிவித்த அவர், இந்த தகவலை அகில இந்திய வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிப்பதாகவும் கூறினார்.
 
மேலும், கரூர் மாவட்டம் ஏற்கனவே முன்னாள் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவினால் தீரன் சின்னமலை மாவட்டம் என்று அறிவித்திருந்தார். தற்போது அவருடைய அரசு தான் செயல்பட்டு வரும் நிலையில் கரூரில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரிக்கு தீரன் சின்னமலை என்கின்ற பெயரை சூட்ட வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஓவர் பில்டப் கொடுத்து ஒன்னுமில்லாமல் போன ரெட்மி K20!!