Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சிறுவனை கேட்டின் வெளியே விட்டு விட்டு வீட்டுக்குள் நுழைந்த! நொடிகளில் குழந்தையை சுற்றி வளைத்த தெரு நாய்களிடமிருந்து கனப்பொழுதில் காப்பாற்றிய தந்தை!!

Advertiesment
Street dos

J.Durai

கோயம்புத்தூர் , சனி, 29 ஜூன் 2024 (13:16 IST)
கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர் இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு தனது மகனை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்குள் சென்றார். அப்போது அப்பகுதியில் இருந்த நான்கு தெருநாய்கள் குழந்தையை நோக்கி ஓடி வந்துள்ளது.
 
இத்தனை பார்த்த அந்த சிறுவன் அச்சமின்றி கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்களை விரட்ட முயன்றுள்ளார்.
 
ஆனால் அதற்கெல்லாம் அஞ்சாத தெரு நாய்கள் நொடிகளில் சிறுவனை சுற்றிவளைத்தது.
 
தெருநாய்கள் சுற்றி வளைப்பதை பார்த்து சிறுவன்  கூச்சலிடவே, கூச்சல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் சென்று கொண்டிருந்த தந்தை விரைந்து வந்து சிறுவனை மீட்ட நிலையில், அங்கிருந்து தெருநாய்கள் வந்த வேகத்தில் திரும்பின. 
 
இந்த  காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் சிறுவன் நான்கு தெரு நாய்கள் வருவதைப் பார்த்து கல்லை எடுப்பதும், நொடிகளில் தெரு நாய்கள் சிறுவனை சுற்றி வளைப்பதும் , அச்சத்தில் இருந்த சிறுவனை கணப்பொழுதில் தந்தை காப்பாற்றுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது.
 
தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
 
அண்மைக்காலமாக தெரு நாய்கள் குழந்தைகளை குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் நிலையில், குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதோடு மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறையினர் திறனைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பெரும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி பரிதவித்த தெருநாயை 2 மணி நேரம் போராடி மீட்ட மனிதநேய இளைஞர்கள்!