Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நில அளவை புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (16:40 IST)
தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார். 
 
இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என அழைக்கப்படும் வில்லியம் லாம்டன் கடந்த 10.04.1802-ம் ஆண்டு சென்னை புனித தோமையர் மலையில் நில அளவை பணிகளை தொடங்கினார்.
 
அதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ம் தேதி தேசிய நில அளவை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நில அளவைகள் துறை சார்பில் புகைப்பட கண்காட்சி இன்று நடைபெறுகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார். 

இதில் பழங்காலங்களில் பயன்படுத்தப்பட்ட நில அளவை கருவிகள், வரைபடங்களை பெரிதாகவும், சிறிதாகவும் காண்பிக்கக்கூடிய பெண்டாகிராம் கருவி, பரப்பளவை அளக்கும் கம்ப்யூட்டிங் ஸ்கேல் கருவிகள், இணை கோடுகளை சரியாக வரைவதற்கு பயன்படும் பேரலால் ரூர்ல்ஸ் கருவிகள் உள்பட பல்வேறு கருவிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.  இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments