Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முழு ஊரடங்கில் என்னென்ன இயங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு

Advertiesment
முழு ஊரடங்கில் என்னென்ன இயங்கலாம்? தமிழக அரசு அறிவிப்பு
, வியாழன், 18 ஜூன் 2020 (16:07 IST)
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் இம்மாதம் 30-ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த முழு ஊரடங்கில் ஒருசில நடவடிக்கைகளை அரசு அனுமதித்துள்ளது. அவை பின்வருவன:
 
* பிரீ பெய்ட் ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகனங்களை ரெயில் நிலையங்கள், விமான நிலையங்களில் இருந்து அழைத்து வர அனுமதிக்கலாம். 
 
* வங்கிகள், நிதி நிறுவனங்களின் தலைமையகங்கள் குறைந்த ஊழியர்களுடன் செயல்படலாம். 20ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை குறைந்த ஊழியர்களுடன் வங்கிகள் காலை 10 மணியில் இருந்து பிற்பகல் 2 மணிவரை இயங்கலாம். 
 
* மேலாண்மை மற்றும் கண்காணிப்பு நிலை அலுவலர்களின் போக்குவரத்துக்காக தொழில்துறை மூலம் இ-பாஸ் பெற்றுக் கொள்ளலாம். 
 
* தொலை தொடர்பு, ஐ.டி. சேவை நிறுவனங்கள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம். அந்த நிறுவனம் தரும் பட்டியலில் உள்ளவர்களுக்கு இ-பாஸ் வழங்கப்படும்.
 
* எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், பெட்ரோல் நிலைய ஊழியர்கள் அது தொடர்பான பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என கூறியுள்ளது. 
 
இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உதவியாளருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்