வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தோன்றியுள்ள நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவது எப்போது என்பது குறித்த தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு சற்று முன்னர் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி உள்ளது.
இது அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்ற உடன் வடமேற்கு திசையில் நடந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா கடற்கரை பகுதிகளில் மிதமான மழை முதல் கன மழை வரையும் என்றும் கூறப்படுகிறது.