Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கூகுளில் பதுங்கியுள்ள சைபர் கொள்ளையர்கள் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

Advertiesment
கூகுளில் பதுங்கியுள்ள சைபர் கொள்ளையர்கள் : சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை
, செவ்வாய், 2 ஜூலை 2019 (19:30 IST)
இன்றைய உலகம் நவீன தொழில்நுட்பங்களால் நிரம்பி வழிகிறது. நாளும் மனிதர்கள் புதுப்புது விசயங்களில் கவனம் செலுத்தி மனிதர்களை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கிறது. கைகளில் உலகத்தை அடக்கிவிட்டோம். அதனால் பல நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு.
இந்நிலையில் பணபரிவர்த்தனை செயலிகளில் சேவை மைய எண்கள் என போலியான எண்களை கூகுளில் பதிவுசெய்து வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வங்கிக் கணக்குகளில் பல லட்சஙக்ள் ஒரு கும்பல் மோசடி செய்து வருவதாக மத்தி குற்றப்பிரிவு போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
 
இன்று எல்லோருக்கும் எல்லா செயல்களுமே உடனே ஆக வேண்டும் என்று நினைக்கிறார்கள். சில நிமிடம் கூட தாமதாகக் கூடாது என்று நினைக்கிறார்கள்.அதிலும் பணப் பரிமாற்றங்களுக்கு தனியார் பரிவர்த்தனை செயலிகளும் பயன்பாட்டுக்கு வந்துள்ளதால்.கூகுள் பே GOOGLE PAY,  போன் பே (phone pay ) பேடி எம் (paytm) ஆகியவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.
 
இந்நிலையில்  சென்னை காவல் ஆணையர் இதுகுறித்து கூறியுள்ளதாவது :
 
சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் உள்ள வக்கி மோசடி தடுப்பு பிரிவில் தினமும் 10 புகார்களாவது வருகின்றன. இது போன்று கூகுளில் பதிவாகியுள்ள போலி சேவை எண்களை நீக்குவதற்கு அனுமதியை காவல் துறையினருக்கு வழங்கப்படாததால் போலி எண்கள் நீக்கப்படாமல் உள்ளன, இதன் காரணத்தால் வாடிக்கையாளர்கள் உண்மையான சேவை மையம் என்று கருது இது போன்ற போலி சேவைகளில் சிக்கி ஏமாறுகிறார்கள் என்று தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயணம் பலவிதம்: விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்திய பெண் நரிக்குட்டி