Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கதீட்ரல் மேம்பாலத்திற்கு இசையமைப்பாளரின் பெயர்

chennai cathedral road
, வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (18:54 IST)
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கர்நாடக சங்கீத இசையமைப்பாளர் டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா பெயர் வைக்க மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியின் ஆகஸ்ட் மாதத்திற்கான மாமன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது 58 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன்படி, சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு கர்நாடக சங்கீத மேதை டாக்டர் எம்.பாலமுரளிகிருஷ்ணா எனப் பெயர் மாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதேபோல், சென்னையில் உள்ள சமுதாய நலக்கூடங்களில் ஓய்வு  பெற்ற அலுவலர்களின் குடும்ப நிகச்சியில் 50 சதவீத சலுகை கட்டணத்தில் அனுமதி வழங்குவதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா சொத்துக்கள் ஏலம் விடும் விவகாரம்: தீபாவின் மனு தள்ளுபடி..!