கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலூகா எலவனாசூர் கோடை அங்காளம்மன் கோவிலில் மாசி மாதம் தேர்த்திருவிழா நடந்து வருகிறது.
நேற்று காலை சுமார் 10 : 30 மணியளவில் தேரில் அம்மன் சிலை வைத்து அலங்கரித்து, சிறப்பு பூஜை தீபாராதனையுடன் தோரோட்டம் துவங்கியது.
அப்போது, அங்குள்ள முக்கிய சாலைகளில் மதியம் 1:30 மணிக்கு மேட்டுத்தெருவில் சென்றபோது, ஒரு பள்ளத்தில் தேர்ச்சக்கரம் சிக்கியது. இதனால் 24 அடி உயரமுள்ள தேர் சாலையில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதனையடுத்து, இரண்டு பொக்ளைன் இயந்திரங்களை வரவழைத்து, தேரை மீட்டனர். பின்னர் தேர் நிலையை தேர் அடைந்தது. இந்த விபத்தில் பூசாரி சுந்தரம் லேசாயான காயம் அடைந்தார். அவருக்கு உளுந்தூர் பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.