Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த வாரம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் - எம்.ஆர் . விஜயபாஸ்கர்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (20:04 IST)
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்குவதை  தடுக்கும்  விதமாக  மழைநீர்  வடிகால் அமைக்கும் பணி  ரூபாய் சுமார் 13 கோடி இல் அமைக்கப்பட்டுள்ளது என்று கரூரில் தமிழக போக்குவரத்து துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பெரியகுளத்துப்பாளையம் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி ரூ 150 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டதோடு., மாரியம்மன் கோயில் முதல் திருச்சி ரோடு வரை மழைநீர் வடிகால் அமைத்தல் பணி ரூ 155 லட்சம் என்று சுமார் 7 கோடியே 29 லட்சம் மதிப்பிலான பணிகள் முடிவடைந்த நிலையில், தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து பெரியகுளத்துப்பாளையம் குகைவழிப்பாதை அமைக்கப்பட்டு தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், அதனையும் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்., மழைக் காலங்களில் கரூர் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பில் இருந்து பொதுமக்களை காக்கும் விதமாக, மழைநீர் வடிகால் கால்வாய் ரூபாய் சுமார் 13- கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் குளத்துப்பாளையம் பகுதியில் ரூபாய் 3 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ரயில்வே குகைவழி பாதை பணிகள் நிறைவுறும் நிலையில் உள்ளது. அடுத்த வாரம் குகை வழிப்பாதை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும். இதன்மூலம் நகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும் வாய்ப்பாக அமையும் என்றார். பேட்டியின் போது கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடி, அமித்ஷா,அதானி கூட்டணிக்கு கிடைத்த வெற்றி: உத்தவ் தாக்கரே கட்சி குற்றச்சாட்டு

ஜார்கண்ட் மாநிலத்தில் திடீர் திருப்பம்.. ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ் கூட்டணி..!

ஹெச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி மீது பாஜக புகார்

காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்த உத்தவ் தாக்கரே படுதோல்வி.. எடுபடாத ராகுல் பிரச்சாரம்..!

ஒரே வாரத்தில் 3000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments