Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கம்பி வேலியை அலேக்காக தாண்டிய முதலை – ட்ரெண்ட் ஆன வீடியோ

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (19:58 IST)
எந்தவொரு பகுதியில் மழை பெய்து வெள்ளம் ஏற்பட்டாலும், அந்த பாதிப்புகளை விட ட்ரெண்டிங்கில் வருவது அந்த பகுதியில் திடீரென புகுந்து ஸ்டண்ட் அடிக்கும் முதலைகள்தான்.

சமீபத்தில் குஜராத்தின் வடோதரா மற்றும் கர்நாடகாவில் பெய்த கனமழையால் ஆற்றில் இருந்த முதலைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தன.

தற்போது அதேபோல ஒரு அட்டகாசத்தை செய்து ட்ரெண்டிங் ஆகியிருக்கிறது அமெரிக்க முதலை ஒன்று. அமெரிக்காவில் பெய்த கனமழையால் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. ஃப்ளோரிடா பகுதியில் காரில் போய் கொண்டிருந்த க்ரிஸ்டினா ஸ்டீவர்ட் என்பவர் அந்த பகுதியில் ஒரு முதலையை பார்த்துள்ளார்.

சாலையின் ஓரமாக கம்பிவேலி அருகே சென்று கொண்டிருந்த முதலை வேலிக்கு அடுத்த பக்கம் போக முயற்சித்திருக்கிறது. வேலியில் முன்னங்கால்களை வைத்து மனிதர்கள் போலவே ஏறிய முதலை அலேக்காக அடுத்த பக்கம் தாவி இறங்கி சென்றிருக்கிறது.

முதலை செய்த இந்த ஸ்டண்டை வீடியோ எடுத்த அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை பலரும் லைக் செய்து, ஷேர் செய்து வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மன்னர் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை.. நேரில் வரவழைத்து நிவாரணம் தந்த விஜய் மீது விமர்சனம்..!

இந்த ஆண்டு பொங்கல் பரிசு பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுமா? நீதிமன்றம் கேள்வி..!

பள்ளி, கல்லூரி, விமான நிலையங்களை அடுத்து தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

சென்னைக்கு இனி வறண்ட வானிலை தான்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

வங்கதேசத்தில் இந்திய டி.வி., சேனல்களுக்கு தடையா? ஐகோர்ட்டில் மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments