நாம் வாழும் பூமியில் ஆச்சர்யங்களுக்கும், அதிசயங்களுக்கும் பஞ்சமே இருந்ததில்லை. நாள்தோறும் புதுப்புத் சம்பவங்கள் அதிர்ச்சியூட்டும் நிகழ்வுகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது.
அதுபோல் தற்பொழுது ஒரு சம்பவம் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. திடீரென்று பூமியில் ஒரு பள்ளம் ஒன்று உருவாகியுள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் பள்ளம் sinkhole என்பது புதைக்குழி ஆகும். திடீரென்று பூமியில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதுபோன்ற பள்ளம் மேற்கத்திய நாடுகளிலும், அடிக்கடி பூகம்பம் நிகழும் ஜப்பானிலும்தான் ஏற்படும்.
ஆனால் தற்போது ரஷ்யாவில் துலு நகரத்தில் உள்ள தேடிலோவா என்ற பகுதியில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இந்தப் பள்ளத்தின் அகலம் சுமார் 49 அடி ஆகும் (15 மீட்டர் ஆகும்) மற்றும் இதன் ஆழம் சுமார் 98 அடி (30 ) மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் எல்லோரும் இப்பள்ளத்தை ஆச்சர்யத்துடன் பார்த்துச் செல்கின்றனர்..