Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணிக்கு இவ்ளோ செல்வாக்கா? கூப்பிட்டதும் குவிந்த கூட்டம்! காத்து வாங்கும் தைலாபுரம்?

Prasanth Karthick
வெள்ளி, 30 மே 2025 (11:29 IST)

பாமகவில் அன்புமணி - ராமதாஸ் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் அன்புமணி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் நேரடியாகவே அன்புமணியை தாக்கி ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்தோடு நில்லாமல் நேற்றே பா.ம.க கௌரவத் தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக முக்கியஸ்தர்கள் அனைவரையும் வரச் சொல்லி முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியுள்ளார் ராமதாஸ். 

 

அதில் அன்புமணி ஆதரவாளர்களை கட்சி பதவிகளில் இருந்து மாற்ற ராமதாஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. இது ஒருப்பக்கம் இருக்க தற்போது அன்புமணி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்துகிறார். சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடக்கும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அன்புமணியின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

 

தொடர்ந்து அன்புமணி அழைப்பிற்கு பாமகவினர் சென்று வரும் நிலையில், ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்தில் கட்சி ஆட்களின் நடமாட்டம் பெரிதும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவே கட்சியில் அன்புமணிக்கு உள்ள ஆதரவை காட்டுவதாக அன்புமணி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments