Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தந்தி டிவி: அதிமுகவினர் ஆவேசம்!

ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தந்தி டிவி: அதிமுகவினர் ஆவேசம்!

Advertiesment
ஜெயலலிதா மரணம் என வதந்தி பரப்பிய தந்தி டிவி: அதிமுகவினர் ஆவேசம்!
, திங்கள், 5 டிசம்பர் 2016 (19:41 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்தார் என இன்று மாலை 6 மணியளவில் செய்திகள் காட்டுத்தீ போல பரவியது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மருத்துவர்கள் குழு தீவிரி சிகிச்சை அளித்து வருவதாக அறிக்கை வெளியிட்டு அப்பல்லோ மருத்துவமனை அவரது இருப்பை உறுதி செய்தது.


 
 
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து முதலில் வதந்தி பரப்பியது தந்தி டிவி தான் என சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அப்பல்லோ மருத்துவமனையில் உள்ள அதிமுகவினரும் தந்தி டிவிக்கு எதிராக கோஷமிட்டனர்.
 
முதலமைச்சர் மரணம் என தவறான செய்தியை முதலில் வெளியிட்டது தந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே தான் என பரவலாக பேசப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெ. பற்றிய வதந்தி - அரைக் கம்பத்தில் பறந்து மீண்டும் ஏற்றப்பட்ட கட்சிக் கொடி