Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கேள்விக்கென்ன பதில் தீபாவின் பேட்டியை தடை செய்த தந்தி டிவி: பின்னணி என்ன?

கேள்விக்கென்ன பதில் தீபாவின் பேட்டியை தடை செய்த தந்தி டிவி: பின்னணி என்ன?

Advertiesment
கேள்விக்கென்ன பதில் தீபாவின் பேட்டியை தடை செய்த தந்தி டிவி: பின்னணி என்ன?
, சனி, 17 டிசம்பர் 2016 (11:52 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து அதிமுக கட்சியின் அடுத்த தலைமை யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாவிட்டாலும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆதரவுடன் சசிகலா தலைமை பதவியை ஏற்க இருப்பதாக தகவல்கள் வருகின்றன.


 
 
இந்த அரசியல் சூழலில் சசிகலாவுக்கு குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா. நான் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு, அரசியலில் இறங்க இருப்பதாக கூறியுள்ளார். அவரை ஆதரித்தும் சின்னம்மா தீபா எனவும் சில அதிமுகவினர் பேனர் வைத்து வருகின்றனர்.
 
இதனால் தீபாவை பேட்டியெடுக்க பல ஊடகங்கள் முயன்று வருகின்றன. இந்நிலையில் தந்தி டிவியின் பாண்டே தீபாவை கேள்விக்கென்ன நிகழ்ச்சி மூலம் பேட்டியெடுத்தார். இந்த நிகழ்ச்சி குறித்து படு பயங்கரமாக விளம்பரம் கொடுத்தது தந்தி டிவி. ஆனால் திட்டமிட்ட நாளில் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் வேறு ஒரு நபரிடம் எடுத்த பேட்டியை ஒளிபரப்பியுள்ளனர்.
 
தீபாவிடம் எடுத்த பேட்டியை கூறியபடி ஒளிபரப்பு செய்யாமல் அதற்கு பதிலாக அதிமுக எம்எல்ஏ தங்கமணியின் பேட்டியை ஒளிபரப்பினர். இதனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.
 
தீபாவின் பேட்டி ஒளிபரப்பபடாமல் அதனை தடை செய்ததின் பின்னணியில் மேலிடத்தின் உத்தரவு உள்ளதா அல்லது தன்னுடைய TRP ரேட்டிங்கை உயர்த்த தந்தி டிவி தந்திரமாக செயல்படுகிறதா என பல கேள்விகள் சமூக வலைதளங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. மேலும் தந்தி டிவியையும், ரங்கராஜ் பாண்டேவையும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கருணாநிதியை காண சென்னை வந்தார் ராகுல்!!