எனக்காக பிரார்த்தனை செய்த நல்உள்ளங்களுக்கும் நன்றி - விஜயகாந்த்

Webdunia
திங்கள், 11 டிசம்பர் 2023 (19:40 IST)
நடிகர் விஜயகாந்த்  தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும்  நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு சளி அதிகமாக உள்ளதாகவும் சுவாசத்தில் சிரமம் ஏற்படுவதாக மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.

அவர் விரைவில் குணமாக வேண்டி, சினிமாத்துறையினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள்  பிரார்த்தனை செய்தனர்.

இந்த நிலையில்  நடிகர் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியதாக இன்று  மியாட் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த்  தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும்  நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: ‘’ பூரண நலம் பெற வேண்டி வாழ்த்திய திரை உலகை சேர்ந்த அனைவருக்கும்,அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், தேமுதிக மாவட்ட கழக செயலாளர்களுக்கும, கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் அனைவருக்கும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை மீண்டும் மக்களை சந்திக்கும் விஜய்.. 2000 பேருக்கு மட்டும் அனுமதி..!

திருமணத்திற்கு முன் விபத்து.. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்..

திமுக கிளை செயலாளர் துப்பாக்கியால் சுட்டுக்கொலை: சேலம் அருகே பரபரப்பு

ரூ.1 லட்சத்தை நெருங்குகிறது தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.1,360 உயர்வு..!

காஞ்சிபுரத்தில் மீட்டிங்!.. நிர்வாகிகளை சந்திக்க வரும் விஜய்!.. பரபர அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments