Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம்: அமைச்சர் தங்கம் தென்னரசு

Advertiesment
வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம்:  அமைச்சர் தங்கம் தென்னரசு
, திங்கள், 11 டிசம்பர் 2023 (17:46 IST)
வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் என  அமைச்சர் தங்கம் தென்னரசுசெய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். வெள்ள நிவாரண பணிகள் குறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
வெள்ள நீர் வடிகால் பணிகள் குறித்து எந்த தகவலையும் மறைக்கவில்லை, எங்களது பணிகள் வெளிப்படையாகவே நடைபெற்று வருகின்றன. வடிகால் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது
 
அண்மையில் ஏற்பட்ட ‘மிக்ஜாம்’ புயலுக்குப் பிறகு சென்னை மீண்டு வந்திருக்கிறது, அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் சென்னைக்கு வரவிருந்த பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது. 
 
மழைநீர் தேங்கியிருந்த இடங்களில் அகற்றப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர், முதலமைச்சர் அறிவித்திருந்த நிவாரணத்தொகை பொதுமக்களிடத்தில் வரவேற்பை பெற்றிருக்கிறது என  சென்னை தலைமைச்செயலகத்தில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி அளித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேலாடைகளின்றி ஓடிய ஆண்கள்- பார்த்து வியந்த சுற்றுலா பயணிகள்