Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூவத்தூர் சென்ற எம்எல்ஏக்கள் 4 கிலோ கூடியிருக்கிறார்கள்: வீடியோ பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

கூவத்தூர் சென்ற எம்எல்ஏக்கள் 4 கிலோ கூடியிருக்கிறார்கள்: வீடியோ பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க!

கூவத்தூர் சென்ற எம்எல்ஏக்கள் 4 கிலோ கூடியிருக்கிறார்கள்: வீடியோ பாருங்க விழுந்து விழுந்து சிரிப்பீங்க!
, புதன், 22 பிப்ரவரி 2017 (10:14 IST)
சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதும் எம்எல்ஏக்கள் யாரும் அதிருப்தி காரணமாக அவர் பக்கம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக சசிகலா தரப்பு எம்எல்ஏக்களை கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைத்திருந்தனர்.


 
 
இது தமிழகம் முழுவதும் பெரும் சலசலப்பையும் மக்கள் மத்தியில் வெறுப்பையும் ஏற்படுத்தியது. கூவத்தூரில் எம்எல்ஏக்கள் சசிகலா தரப்பினரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறார்கள் என்பது பொதுமக்களுக்கு அப்பட்டமாக தெரிந்தும் ஆட்சியை கைப்பற்ற அவர்கள் தொடர்ந்து அவர்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தான் வைத்திருந்தனர்.
 
அங்கு இருந்த சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் சொகுசாக இருக்கிறார்கள் எனவும், அங்கு அவர்களுக்கு உள்ள வசதிகள், எப்படி இருக்கிறார்கள், என்ன மாதிரியான உணவுகள், என்ன மாதிரியான வசதிகள் அளிக்கப்படுகிறது போன்றவை தினமும் செய்திகளாக சமூக வலைதளங்களில் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பையும் நடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த எம்எல்ஏக்களை வைத்து ஆட்சியையும் தக்கவைத்துக்கொண்டது சசிகலா தரப்பு. இந்நிலையில் அன்று சட்டசபையில் நடந்தவற்றை பற்றி நடந்த தொலைக்காட்சி விவாதத்தின் போது கூவத்தூரில் எம்எல்ஏக்கள் எப்படி இருந்தார்கள் என்பது பேசப்பட்டது.
 
விவாதத்தில் பேசிய காங்கேயம் தொகுதி எம்எல்ஏ தனியரசு கூவத்தூரில் இருந்த எம்எல்ஏக்கள் ஒரு வாரத்தில் 4 கிலோ அதிகரித்துள்ளதாகவும், கருப்பானவர்கள், நல்ல கலர் ஆகிவிட்டதாகவும், தாங்கள் ஏன் கூவத்தூர் ரிசார்ட்டில் இருந்தோம் என்பதை கூறினார்.

 
மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை மிகவும் கூலாக காமெடி செய்து, தங்கள் தரப்பு தவறை மறைக்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதை மறந்து சிரிப்பு வரும்படி தனியரசு எம்எல்ஏ பேசியது அந்த தொகுதி மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி விரட்டியடிப்பு! (வீடியோ இணைப்பு)