Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி விரட்டியடிப்பு! (வீடியோ இணைப்பு)

சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி விரட்டியடிப்பு! (வீடியோ இணைப்பு)

சசிகலாவை சந்திக்க சென்ற வளர்மதி, கோகுல இந்திரா, சி.ஆர்.சரஸ்வதி விரட்டியடிப்பு! (வீடியோ இணைப்பு)
, புதன், 22 பிப்ரவரி 2017 (09:34 IST)
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பிடப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சிறையில் பார்க்க சென்ற அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் அனுமதி கிடைக்காமல் சிறைக்காவலர்களால் விரட்டப்பட்டனர்.


 
 
சிறையில் இருக்கும் சசிகலாவை அவ்வப்போது அவரது கட்சியினர் சென்று பார்த்து வருகின்றனர். நேற்று அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் சென்று பார்த்தனர்.
 
இந்நிலையில் சசிகலாவைச் சந்திக்க முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் அதிமுக செய்தித்தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் சிறை வளாகத்திற்கு சென்றனர். ஆனால் சிறை நிர்வாகம் அவர்களை அனுமதிக்காததால் அவர்கள் 4 மணி நேரம் சிறைக்கு வெளியே காத்திருந்தனர்.

 
சசிகலாவை சந்திக்க நாள்தோறும் அனுமதிக்க முடியாது என்று கூறி சிறைத்துறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டதாகவும், சிறை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பாணியில் இருந்த சிறை காவலர்கள் அவர்களை விரட்டியத்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் விரட்டியடிப்பது போன்ற காட்சி தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது!